Published : 17 Jan 2021 17:37 pm

Updated : 17 Jan 2021 18:40 pm

 

Published : 17 Jan 2021 05:37 PM
Last Updated : 17 Jan 2021 06:40 PM

அஸ்வினி , பரணி, கார்த்திகை;  வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 18 முதல் 24ம் தேதி வரை)

natchatira-palangal

'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -


நன்மைகள் அதிகமாக நடக்கும் வாரம் இது.

எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக விலகும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

ஏற்கெனவே பணியில் இருந்தவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
வியாபாரம் மற்றும் தொழிலில் படிப்படியான சீரான வளர்ச்சி ஏற்படும். தொழிலில் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டியது வரலாம். புதிய ஆட்களை நியமிப்பது, சிறந்த தொழில் வல்லுநர்களை இணைத்துக் கொள்வது போன்றவை ஏற்படும்.

வியாபார நிறுவனத்தை விரிவுபடுத்துவது வேறு இடத்திற்கு மாற்றுவது போன்றவை நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அது இந்த வாரம் இல்லாவிட்டாலும் இனிவரும் காலங்களில் நடப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு.

பெண்களுக்கு எதிர்பார்த்த தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்படும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். கல்வித் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். விருப்பங்கள் நிறைவேறும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த வாரம் -
திங்கள் -

எந்த ஒரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை. அலட்சியமாக இருக்க வேண்டாம். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். நாம் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கமும் எரிச்சலும் அதிகமாகும். பொறுமையாக இருக்க வேண்டும்.

செவ்வாய் -
சற்று நிதானமாகச் செயல்படுவது நல்லது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் உங்களுடைய பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிதானப் போக்கை கடைபிடியுங்கள். தனவரவு தாமதமாகும்.

புதன் -
ஆதாயம் தரும் விஷயங்கள் அனைத்தும் சாதகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான உதவிகளும், சலுகைகளும் கிடைக்கும். அலுவலகப் பணிகள் எளிதாக முடியும். சுபகாரிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு அது தொடர்பாக நல்ல தகவல் கிடைக்கும்.

வியாழன் -
இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பச் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய வியாபாரம் தொடர்பான வாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகள் மனநிறைவைத் தரும்.

வெள்ளி -
எதிலும் நிதானமும் பொறுமையும் தேவை. பயணங்களில் கவனமாக இருக்கவேண்டும். வாகனப் பழுதுகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள். இயந்திரங்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.

சனி -
எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் சில சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஒரு சில உதவிகளும் ஆதாயமும் ஏற்படும்.

ஞாயிறு -
நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல தகவல் இன்று கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு பிரச்சனை இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபாடு செய்யுங்கள். அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
************************

பரணி -

தேவையான உதவிகள் அனைத்தும் சமயத்தில் கிடைக்கும்.

மனக் குழப்பங்களும் மனபாரமும் தீரும். குடும்பப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கடன் தொடர்பான சர்ச்சைகளும் அதனால் குடும்பத்தில் பலவிதமான பிரச்சினைகளைச் சந்தித்து இருப்பீர்கள். இனி அந்தப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்படியாக அமையும்.

இந்த வாரம் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அலுவலகப் பணியில் இருந்த அச்ச உணர்வு நீங்கும். வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

பெண்களுக்கு நன்மைகள் பலவாறாக நடக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் தீரும்படியாக தேவையான உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு புதிய கல்வி கற்கும் ஆர்வமும், புதிய மொழிகளைக் கற்கும் ஆர்வமும் ஏற்படும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்படும்.

இந்த வாரம் -
திங்கள் -

எதிர்பார்த்த தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். மனநிறைவு ஏற்படும் நாள்.வியாபாரம் வளர்ச்சி சீராக இருக்கும் வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

செவ்வாய் -
எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாகச் செயல்பட வேண்டும். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

புதன் -
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. எதிர்பார்த்த சில விஷயங்கள் காரணமின்றி தள்ளிப் போகும்.

வியாழன் -
பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுய தொழில் முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஒப்பந்தங்களாக மாறும்.

வெள்ளி -
அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணியைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது வரும். எதிர்பார்த்த பண உதவிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் தாமதமாகலாம். தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் மனக் குழப்பங்கள் ஏற்படும்.

சனி -
மனதை உறுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகளில் நல்ல முடிவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலிலும் வியாபாரத்திலும் சீரான வளர்ச்சி இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்.

ஞாயிறு -
குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள்.எந்தவொரு பிரச்சினைகளிலும் தலையிட வேண்டாம். அமைதியும் தியானமும் மிக மிக முக்கியம். சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேச வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.
**********************
கார்த்திகை -

அதிக நன்மைகள் ஏற்படும் வாரம் இது.

இதுவரை தாமதப்பட்டுக் கொண்டிருந்த விஷயங்கள் அனைத்தும் இனி எளிதாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பணவரவு மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

இதுவரை இருந்த தடை தாமதங்கள் அனைத்தும் விலகும். குரு பார்வை முழுமையாகக் கிடைப்பதால் இனி எந்த விதமான குழப்பங்களும் தடைகளும் வராது என்பதை நம்பலாம்.

அலுவலகத்தில் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை சலுகைகளும் பதவி உயர்வு உள்ளிட்டவைகளும், ஊதிய உயர்வும் கிடைக்கும். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

தாயார் மற்றும் தந்தையின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்புக்கு மாறும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

பெண்களுக்குச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்காலம் பற்றிய கவலை தீரும் அளவுக்கு நன்மைகள் நடைபெறும் வாரமாக இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள்.

கலைஞர்களுக்கு சக நண்பர்கள் மூலமாக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -
திங்கள் -

அதிக நன்மைகள் நடைபெறும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். இளைய சகோதரர்கள் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையின் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள்.

செவ்வாய் -
நண்பர்களால் அதிக உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.

புதன் -
மன சஞ்சலத்திற்கு இடம் கொடுக்காதீர்கள். ஆரோக்கியம் பற்றிய கவலை தோன்றி மறையும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று நிதானமாக இருக்க வேண்டும்.

வியாழன் -
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி -
தேவையற்ற பயணங்கள் வேண்டாம். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தேவையில்லாத சர்ச்சை பேச்சுவார்த்தைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். குழந்தைகளிடம் அன்பு பாராட்டுங்கள். வாழ்க்கைத் துணையிடம் தேவை இல்லாத வார்த்தை போர் வைத்துக்கொள்ள வேண்டாம்.

சனி -
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சினைகள் சமாதானம் ஆகும். சொத்துகள் சம்பந்தமான விஷயங்கள் பேசி முடிவாகும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும்.

ஞாயிறு -
குழந்தைகளுக்கு கல்வி பற்றிய அக்கறை தோன்றும். அவர்களின் கல்வி தொடர்பான விஷயங்களில் புது முயற்சிகள் எடுப்பீர்கள். பழுதான பொருட்களை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்-
பைரவர் வழிபாடு செய்யுங்கள். பைரவர் அஷ்டோத்திரம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும்.
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!


அஸ்வினிபரணிகார்த்திகைநட்சத்திர பலன்கள்கார்த்திகை;  வார நட்சத்திர பலன்கள் - (ஜனவரி 18 முதல் 24ம் தேதி வரை)பலன்கள்இந்த வார நட்சத்திர பலன்கள்AswiniBharaniKatthigaiVaara natchatira palangalNatchatira palangal'சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x