மிதுனம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

பராபவ வருடம் - 14.04.2026 முதல் 13.04.2027 வரை
மிதுனம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
Updated on
2 min read

அலை போல் அவமானங்கள் வந்தாலும் சிரிக்கும் சிற்பங்கள் போல் சிரித்துக் கொண்டே கடந்து செல்லும் மிதுன ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் தடைகள் உடைபடும். தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைபட்ட சுப காரியங்கள் வெகு விமர்சையாக நடக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பிள்ளைகளால் உறவினர் மத்தியில் பெருமையடைவீர்கள். சகோதர வகையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெகு நாட்களாக பேசாமல் இருந்து வந்த சகோதரர்கள் இனி பேசுவார்கள்.

குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை ராசிக்குள் குரு பகவான் அமர்ந்திருப்பதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை ஏற்படும். உடற்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. வீணாக கோபப்படாதீர்கள். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு பகவான் 2ம் வீட்டுக்கு செல்வதால் அலைபாய்ந்த மனது இனி அமைதியாகும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வற்றிய பணப்பை நிரம்பும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குரு பகவான் 3ம் வீட்டுக்கு செல்வதால் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். சுற்றியிருப்பவர்களில் யார் நல்லவர் என்பதை உணர்வீர்கள்.

ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 9ம் வீட்டிலும், கேது 3ம் வீட்டிலும் தொடர்வதால் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். தந்தைக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள் வரும். சிலருக்கு வீடு- மனை வாங்கும் யோகம் உண்டு. 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 8ம் வீட்டுக்கும், கேது 2ம் வீட்டுக்கும் வருவதால் கொஞ்சம் அமைதி காக்கவும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: ராசிக்கு 10ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் பாதியிலேயே நின்று போன வேலைகள் முழுமையடையும். மனைவி வழியில் உதவி கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் நிம்மதி கிட்டும். அடகிலிருந்த நகைகளில் சிலவற்றை மீட்பீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வியில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் சந்தை நிலவரமறிந்து கொள்முதல் செய்வீர்கள்.

தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, ரசாயன பொருட்கள், கட்டுமான உதிரி பொருட்களால் ஆதாயம் உண்டு. கூட்டு தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை குறைக் கூறிக் கொண்டிருந்த அதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். கணினி துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்குவதுடன் சாதித்து காட்டும் வருடமாக இந்த பராபவ வருடம் உங்களுக்கு அமையும்.

பரிகாரம்: மதுரை– மேலூர் சாலையில், 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை ஒரு சனிக்கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

மிதுனம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in