

நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு, சொன்ன சொல் தவறாத நீங்கள், உண்மையை உரக்கச் சொல்வதில் யாருக்கும் தலை வணங்க மாட்டீர்கள்.
உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் சந்திரன் இருக்கும்போது இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் தலைமை பதவி தேடி வரும். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். தாழ்வு மனப் பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு வாரிசு உருவாகும். விரயச் செலவுகளைக் கட்டுப் படுத்துவது நல்லது. மகளுக்கு திருமணத்தை முடிப்பீர்கள்.
1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் வீடு, மனை வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 12-ம் வீட்டுக்கு செல்வதால் எல்லா விஷயங்களிலும் நிதானம் அவசியம். சகோதர - சகோதரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
14.10.2026 முதல் 31.12.2026 வரை ஜென்ம குருவாக நுழைவதால் அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்து போகும். யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்துங்கள்.
12.1.2026 முதல் 5.2.2026 வரை 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை. எலக்ட்ரிக்கல், எலக்ரானிக்ஸ் சாதனங்கள் பழுதாகும். கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. 2.4.2026 முதல் 11.5.2026 வரை 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால், அலைச்சல்கள் ஏற்படும். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
இந்த வருடம் முழுவதுமாக அஷ்ட மத்து சனி தொடர்வதால் கூட இருந்தே சிலர் குழி பறிப்பார்கள். ரகசியங் களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
டிச.4-ம் தேதி வரை உங்கள் ராசிக்குள் கேது நிற்பதால் எதிர் காலத்தைப் பற்றிய பயம் வரும். முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். 7-ம் வீட்டில் ராகு நிற்பதால் தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வீண் விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள். டிச. 5-ம் தேதி முதல் கேது 12-ம் வீட்டுக்குள் செல்வதால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். தூக்கம் குறையும். 6-ம் வீட்டில் ராகு நிற்பதால் வழக்கில் வெற்றியுண்டு. கடன் பிரச்சினை குறையும். எதிரிகள் நண்பர்களாவார்கள்.
இல்லத்தரசிகளுக்கு துணிமணிகள் சேரும். உங்களின் தரம் உயரும். கன்னிப் பெண்களுக்கு பட்டப்படிப்பில் வெற்றியுண்டு. கூடிய விரைவில் கெட்டி மேளச் சப்தம் கேட்கும். மாணவ-மாணவிகளுக்கு சோம்பல் விலகும். பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள்.
வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்க்க விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். அனுபவம் வாய்ந்த புது வேலையாட்கள் அமைவார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட், மருந்து வகைகளால் திடீர் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் உத்தியோகத்தில் உங்கள் தகுதி உயரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் தேடி வரும். பிரச்சினை தந்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கணினி துறையினருக்கு பணிச்சுமை அதிகரிக்கும், அதற்கு தகுந்தாற்போல் சம்பளமும் உயரும்.
கலைத்துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். வீண் வதந்திகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தப் பாருங்கள்.
மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, தன் கையே தனக்குதவி என்பதை உணர வைப்பதுடன், வாழ்க்கையில் புதிய அனுபவத்தையும் கற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஸ்ரீ செல்வ ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். தடைகள் விலகி சாதிப்பீர்கள். நிம்மதி பிறக்கும்.