

எங்கும் எதிலும் முதலிடத்தை பிடிப்பவர்களே, எதையும் வித்தி யாசமாக செய்து முடிப்பவர்களே!
உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள் தீரும். இங்கிதமாகப் பேசி சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரபலங் கள், வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாய மடைவீர்கள்.
1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து போகவும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டுக்கு செல்வதால் சேமிப்புகள் கரையும். புது வீடு மாறுவீர்கள். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. 14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டுக்கு செல்வதால் சொந்த வீடு மற்றும் உயர்தர வாகனம் அமையும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
1.8.2026 முதல் 2.9.2026 வரை மற்றும் 6.11.2026 முதல் 22.11.2026 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால் தம்பதிக்குள் கருத்து மோதல்கள் வரும். வழக்குகளில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய், யோகாதிபதி சூரிய னுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் சிலருக்கு பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
ஏழரைச்சனியில் விரயச் சனி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் செலவுகள் அதிகமாகும் வெளிநாடு போக விசா கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
டிச.4-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். பூர்வீகச் சொத்து விஷயமாக அலைய வேண்டாம். 11-ம் வீட்டில் ராகு நிற்பதால் ஷேர் மார்க்கெட்டில் பணம் வரும்.
கொடுத்து ஏமாந்துப் போன தொகையில் ஒரு பகுதி கிடைக்கும். டிச. 5-ம் தேதி முதல் ராகு 10-ம் இடத்துக்கு வருவதால் உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும், சின்னச் சின்ன சலுகைகள் கிடைக்கும். புது பொறுப்புகள் தேடி வரும். கேது 4-ம் இடத்துக்கு வருவதால் அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் உண்டு.
இல்லத்தரசிகளுக்கு குடும்பத்தில் சின்னச் சின்ன கோப, தாபங்கள் வரும். உடல் ஆரோக்கியத்தில் மெத்தனமாக இருக்கா தீர்கள். யோகா, தியானம் செய்வது நல்லது. கன்னிப் பெண்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கும். முக்கிய முடிவு தொடர்பாக பெற்றோரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது. மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும்.
வியாபாரத்தில் வருடப் பிற்பகுதியில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். சந்தை நிலவரப்படி கொள்முதல் செய்வீர்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். அனுபவமிகுந்த பணியாட்களை சேர்ப்பீர்கள். உணவு, எலட்ரானிக்ஸ், இரும்பு வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் அவ்வப்போது உரசல் போக்கு வரும். நேரடியாக பேசி புரிய வைக்கப் பாருங்கள்.
உத்தியோகத்தில் இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரி உங்களுக்கு இணக்கமாக இருப்பார். தடைபட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் வருட பிற்பகுதியில் கிடைக்கும். கணினி துறையினருக்கு வெளிநாட்டில் வாய்ப்புகள் கிடைக்கும். கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.
கலைத்துறையினருக்கு மனப்போராட்டம், கலக்கம் விலகி உற்சாகம் பிறக்கும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த வாய்ப்புகள் இனி உங்கள் கதவை தட்டும்.
மொத்தத்தில் இந்த 2026-ம் ஆண்டு விடா முயற்சியாலும், தொலை நோக்குச் சிந்தனையாலும் வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்: திருவண்ணாமலை, போளூரிலிருந்து செங்கம் சென்றால் வில்வாரணி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள முருகப் பெருமான் கோயிலில் ஏதாவது ஒரு சஷ்டி திதியில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். தடைகள் விலகி சாதிப்பீர்கள்.