

சுற்றியிருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ, ஏது நினைப்பார்களோ என்றெல்லாம் யோசிக்காமல் மனதில் பட்டதைப் பளிச் சென்று பேசிவிடும் நீங்கள், எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பவர்கள்.
உங்கள் ராசியிலேயே இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். வருங்காலத்துக்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். பக்குவமாகப் பேசி பல காரியங்களை கச்சிதமாக முடித்துக் காட்டுவீர்கள். எனினும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நேரம் கிடைக்கும் போது உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்தால் நலமாக இருக்கும். தம்பதிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும்.
1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்பதால் சாதுர்யமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். சொத்து மற்றும் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 3-ம் வீட்டுக்கு செல்வதால் சேமிப்புகள் கரையக்கூடும். அதே சமயம் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும்.
14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டுக்கு செல்வதால் தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கும். சிலர் வீடு மாறுவீர்கள்.
1.1.2026 முதல் 16.1.2026 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால் வீடு, மனை வாங்குவதில் கவனம் தேவை. சகோதர வகையில் அலைச்சலும், மனக் கசப்பும் வந்து விலகும். 2.9.2026 முதல் 6.11.2026 வரை மற்றும் 22.11.2026 முதல் 31.12.2026 வரை 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால் தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.
இந்த வருடம் முழுவதும் சனி பகவான் லாப வீட்டிலேயே தொடர் வதால் திடீர் பணவரவு உண்டு. சொந்த வீடு வாங்குவீர்கள். வருமானம் உயரும். சிலர் புதுத் தொழிலில் தொடங்குவீர்கள்.
டிச.4-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது நிற்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் இருக்கும். 10-ம் வீட்டில் ராகு நிற்பதால் உத்தியோகத்தில் புதுப் பொறுப்புகள் தேடி வரும். ஒருபக்கம் வேலைச்சுமையும் இருக்கும். டிச.5-ம் தேதி கேது 3-ம் இடத்துக்கு வருவதால் மனக்கவலைகள் விலகும். இனி உற்சாகத்துடன் இருப்பீர்கள். 9-ல் ராகு அமர்வதால் மற்றவர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்காமல், நீங்களே முடிப்பது நல்லது.
இல்லத்தரசிகளுக்கு சுயதொழில் செய்ய வங்கி கடன் கிடைக்கும். கன்னிப் பெண் களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். மாணவ - மாணவிகளுக்கு மறதி, மந்தம் நிலை மாறும்.
வியாபாரிகளுக்கு அதிரடியாக லாபம் கிடைக்கும். வாராக் கடன்கள் வசூலாகும். அனுபவமிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புகழ்பெற்ற நிறுவனங் களுடன் புதிய ஒப்பந்தங்களை செய்து கொள்வீர்கள். உணவு, துணி, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் உண்டு. பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள் வார்கள்.
உத்தியோகத்தில் உங்களுக்கான அங்கீ காரம் கிடைக்கும். அதிக சம்பளத்துடன் பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு,சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கணினி துறையில் இருப்பவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர் புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் வாய்ப்பு கிடைக்கும். கலைத் துறையினருக்கு அரசாங்கத்தால் பரிசு, பாராட்டு கிட்டும்.
மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, உங்களின் வாழ்க்கைத் தரத்தை ஒருபடி மேலே உயரச் செய்வதாக அமையும்.
பரிகாரம்: பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சாலையில் குறிச்சி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்கையை அமாவாசை திதியில் எலுமிச்சம்பழ தீபம் ஏற்றி வணங்குங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.