2022 எப்படி இருக்கும்? சுவாதி நட்சத்திர அன்பர்களே! தேவையான உதவி; பண வரவு கூடும்; எதிலும் கவனம் தேவை! 

2022 எப்படி இருக்கும்? சுவாதி நட்சத்திர அன்பர்களே! தேவையான உதவி; பண வரவு கூடும்; எதிலும் கவனம் தேவை! 
Updated on
1 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


சுவாதி:


ராகுவை நட்சத்திரநாதனாகக் கொண்ட சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!


இந்த ஆண்டு தேவையான உதவிகள் கிடைக்கும். பண வரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாகப் பணிகளை மேற்கொள்வது நல்லது.

மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் நீங்கும். அரசியல்வாதிகள் எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு புதிய வீடு மனை வாகன யோகம் ஏற்படும்.

பரிகாரம்: நரசிம்மரை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

மதிப்பெண்கள்: 68% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.

********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in