விருச்சிக ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள்; துணிச்சல்; எதிலும் வெற்றி; கோபம் வேண்டாம்; நிதானம் தேவை!

விருச்சிக ராசி அன்பர்களே! அக்டோபர் மாத பலன்கள்; துணிச்சல்; எதிலும் வெற்றி; கோபம் வேண்டாம்; நிதானம் தேவை!
Updated on
2 min read

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)


கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய ஸ்தானத்தில் சனி, குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் புதன்(வ), செவ்வாய், சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.
3ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை அன்று சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
4ம் தேதி புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
18ம் தேதி சூர்ய பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
23ம் தேதி செவ்வாய் பகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30ம் தேதி புதபகவான் விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31ம் தேதி சுக்கிர பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த மாதம் பலவகையான யோகம் வந்து சேரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.


தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.


குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் நிதானமாகப் பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.


விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் சிறு பிரச்சினையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது. மாணவர்கள் எந்தப் பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும்போது கவனம் தேவை.


அனுஷம்:
இந்த மாதம் எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.


கேட்டை:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறைப் பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும்.


பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வியாழன்
*******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in