

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
கிரகநிலை:
தைரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு, சனி - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது
கிரக மாற்றங்கள்:
5ம் தேதி - குரு பகவான் அதிசாரமாக ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10ம் தேதி - புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11ம் தேதி - சுக்கிரன் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13ம் தேதி - செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14ம் தேதி - சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28ம் தேதி - புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கன்னி ராசி அன்பர்களே!
இந்த மாதம் எல்லாக் காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தைக் குறைத்துப் பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.
பெண்களுக்கு நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும்.
அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள்.
கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.
மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாகத் தோன்றும்.
உத்திரம்:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியும். மனதில் போட்டு வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள்.
ஹஸ்தம்:
இந்த மாதம் பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
சித்திரை:
இந்த மாதம் குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலை தூக்கும். மிகவும் கவனமாகக் கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.
பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாராயணம் செய்து வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23
அதிர்ஷ்ட கிழமை: புதன், வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3, 5
அதிர்ஷ்ட திசை: தெற்கு, தென்கிழக்கு
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
*********************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |