

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)
கிரகநிலை:
ராசியில் சூர்யன், புதன்(வ), குரு, சுக்கிரன், சனி - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது
10ம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
14ம் தேதி சூரியன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
19ம் தேதி செவ்வாய் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
27ம் தேதி சுக்கிரன் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாகப் புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சினைகள் தீரும். தொடங்கிய வேலையைத் திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.
பெண்களுக்கு அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மைகளைத் தரும். தொழில் தொடர்பான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும்.
அரசியல் துறையினருக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. மேலிடத்திடம் சாமர்த்தியமாகப் பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். மனம்விட்டுப் பேசுவது கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும்.
மாணவர்களுக்கு எதையும் நன்கு யோசித்து பின்னர் செயல்படுவது நன்மைகளைத் தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்லது.
உத்திராடம்:
இந்த மாதம் தாயாரின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களைச் செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.
திருவோணம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாகக் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
அவிட்டம்:
இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வாருங்கள். மனக்கஷ்டம், பணக்கஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
***********************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |