ரிஷபம் ராசிக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2025

ரிஷபம் ராசிக்கான மே மாத பலன்கள் முழுமையாக | 2025
Updated on
2 min read

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-05-2025 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 16-05-2025 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார் | 31-05-2025 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்

பலன்கள்: கடின உழைப்பும், மனோ தைரியமும் உடைய ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல்ஆரோக்கியம் ஏற்படும். எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி, பணவரவு எதிர்பார்த்த படி இருக்கும்.

கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.

ரோகிணி: இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.

மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமை வெண்ணை சாற்றி வழிபட மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் | சந்திராஷ்டம தினங்கள்: 16, 17 | அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in