ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025

ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
Updated on
2 min read

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் புதன் , சனி - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்கிரன்(வ), சூரியன் - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்: 07-04-2025 அன்று செவ்வாய் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 10-04-2025 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-04-2025 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26-04-2025 அன்று கேது பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 30-04-2025 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: கனிவே பெருமை என்பதற்கேற்ப கவர்ச்சிகரமான தோற்றமும் கனிவான பேச்சும் தெளிவான சிந்தனையும் கொண்டு அனைவராலும் விரும்பப்படும் ரிஷப ராசி அன்பர்களே... இந்த மாதம் நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப
மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கபெறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் துறைசார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.

வியாபாரிகள் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிகலாபம் பெறுவார்கள். மின்சாரம் கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும் கலைத்துறையினர் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். புதிய கோயில்கள் நிர்மாணிப்பு பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் மக்களுக்காக சேவை செய்வதில் சில காலம் மந்தமாக செயல்பட்டு வந்தவர்கள் எதிர்கால கனவுகளை மனதில் சுமந்து புதிய உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். ஆன்மீக எண்ணங்களும் நாத்திக செயல்பாடுகளும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவுவீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.

ரோகினி: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தங்களுக்கு கீழ் இருப்பவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in