

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு(வ) - தனவாக்கு ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் சுக்கிரன், ராகு என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 05.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 11.02.2025 அன்று ராசியில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 12.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 21.02.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் | 26.02.2025 அன்று அஷ்டம ஸ்தானத்தில் இருந்து புதன் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: ரிஷப ராசியினரே... சொன்ன சொல்லை காப்பாற்ற பிரயத்தனம் எடுப்பீர்கள். இந்த மாதம் லாபஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் உச்சமாக இருக்க ராகு இணைந்திருக்க மிக நல்ல யோக காலகட்டத்தில் இருக்கிறீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். சுபகாரியங்கள் சம்பந்தமான எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.
தொழில் ஸ்தானாதிபதி சனி ஆட்சியாக இருக்கிறார். தொழில் வியாபாரத்தில் சுபச் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும்.
குடும்பாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சினைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும்.
கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சினை தீரும். வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.
வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும். எதிர்பார்த்த மேல்படிப்பு படிக்க வாய்ப்புகள் கிட்டும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.
ரோகினி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் சிலர் புதிய வேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது
பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபட பணகஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள் : 23, 24 | அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்