

மேஷம்: சில வேலைகளை அலைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தாமதப்படுத்தவும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.
ரிஷபம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டு கொடுத்து போகவும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு. கையிருப்பு கரையக் கூடும். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். பிள்ளைகளால் மதிக்கப்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: பூர்வீக சொத்து பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்ப்பு கிட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். பால்ய நண்பர்களை சந்திப்பீர். புது வாகனம் வாங்குவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
சிம்மம்: பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகளில் உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டி குறையும்.
கன்னி: எதிர்ப்புகளை தகர்த்தெறிவீர். பணவரவு திருப்தி தரும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். ஷேர் மூலம் பணம் வரும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
துலாம்: உடன் பிறந்தவர்களால் உதவி உண்டு. தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
விருச்சிகம்: முக்கிய முடிவுகளை தாமதப்படுத்துவது நல்லது. குடும்பத்தினருடன் விவாதங்கள் வேண்டாம். அண்டை வீட்டார், நண்பர்களுடன் பகை ஏற்படும். வீண் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய போராட வேண்டும். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழப்பம் நீங்கி குடும்பத் தில் சந்தோஷம் நிலைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மகரம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சுபநிகழ்ச்சி, பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். பணவரவால் கடன்கள் தீரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்பம்: புது முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர். பூர்வீக சொத்து விற்பனையாகி, எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும். வியாபாரம் சூடு பிடிக்கும். பதவி உயர்வு கிட்டும்.
மீனம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாகஇருந்த கவலை நீங்கும். தள்ளிப் போன திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். கேட்ட இடத்தில் பணம் கிட்டும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.