

மேஷம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்கள்.
ரிஷபம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர் வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மிதுனம்: குடும்பத்தில் குழப்பம் நீடிக்கும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாதீர். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் கூடும். தம்பதிக்குள் விட்டுக்கொடுத்து போகவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை நிதானமாக வசூலிக்கவும். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர். மனக்குழப்பம் நீங்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
சிம்மம்: மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பணப் பற்றாகுறை விலகும். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். கலைகளில் சிறந்து விளங்குவர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
துலாம்: பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளவும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர். அக்கம்பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்கவும். உத்தியோகம் சிறக்கும்.
விருச்சிகம்: எந்த வேலையையும் முடிக்க முடியாமல் திணருவீர். குடும்பத்தில் சிறுசிறு செலவுகள் இருக்கும். மனக்குழப்பம் நீடிக்கும். பால்ய நண்பர் உதவி புரிவார். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் கிடைக்கும்.
தனுசு: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு உண்டு. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படவும். முன்கோபம் அதிகரிக்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
மகரம்: குடும்பத்தில் பழைய பொருட்களை மாற்றுவீர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். புதியவர் நட்பால் உற்சாக மடைவீர். அலைச்சல் குறையும். அலுவலகத்தில் நீடித்த குழப்பம் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிரிகளை எளிதாக சமாளிப்பீர்கள்.
கும்பம்: இழுபறியாக இருந்த வேலைகள் எளிதாக முடியும். தொட்டது துலங்கும். தடைகள் நீங்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் உடனடியாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்: பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். பிறர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.