மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 ஜனவரி 2026
Updated on
2 min read

மேஷம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அடைவீர். முகப் பொலிவு கூடும். வங்கிக்கடனுதவியும் கிட்டும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக நடந்து கொள்வர். சிலர் புது வாகனம் வாங்குவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். சவாலான விஷயங்களைக்கூட சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். போட்டி விவாதங்களில் வெற்றி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களால் பயனடைவீர். வாகனத்தை சீரமைப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மிதுனம்: மன இறுக்கம், குழப்பங்கள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மனைவி வழி உறவினர்களை அனுசரித்து செயல்படவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

கடகம்: அடிப்படை வசதி பெருகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். முக்கிய பிரமுகர்கள் வீட்டு திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

சிம்மம்: விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தடைபட்ட காரியம் சுபமாக முடியும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கன்னி: பழைய நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் தங்கள் விளையாட்டுத்தனத்தை நிறுத்தி விட்டு பொறுப்புடன் செயல்படுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவமுண்டு. வியாபாரம் சிறக்கும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

துலாம்: பிள்ளைகளுக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனைவாங்குவதற்கான முயற்சியில் இறங்குவீர். பிரபலமானவர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கை கூடி வரும். பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரம் நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் மற்றவர் பிரச்சினையில் தலையிடாதீர்.

தனுசு: மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக செலவு, அலைச்சல் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. வாகனத்தை சீரமைப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

மகரம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிட்டும். சாதுர்யமாக பேசி காரியங்களை செயல்படுத்தி காட்டுவீர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

கும்பம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். கோபம் குறையும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். எதிலும் அவசரம் கூடாது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மீனம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்பு நீங்கி கனிவான பேச்சுவார்த்தை இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 ஜனவரி 2026
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000: முதல்கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in