

மேஷம்: புகழ், கவுரவம் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். பணவரவு அதிகரிக்கும். வாசனை திரவியம், கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள்.
ரிஷபம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். யோகா, தியானத்தில் மனதைச் செலுத்துங்கள். யாருக்கும் எந்த உத்தரவாதமோ, உறுதிமொழியோ கொடுக்க வேண்டாம்.
மிதுனம்: அடமானம் வைத்த பொருட்களை மீட்க வழி பிறக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் புது வழிமுறைகளை கையாளுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும்.
கடகம்: தாய்வழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் உண்டு.
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் நீங்கி அமைதி திரும்பும். விலகியிருந்த பழைய சொந்தங்கள்தேடி வருவார்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
கன்னி: வீட்டுக்குத் தேவையான நவீன மின்னணு, மின்சார சாதனங்கள்வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவிசாய்ப்பீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். தாயாரின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.
துலாம்: வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். கடந்தகால இனிய அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
விருச்சிகம்: தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் போய் விட்டோமே என்று ஆதங்கப்படுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. உடல்சோர்வு வரக்கூடும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
தனுசு: முகப்பொலிவு கூடும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். நீண்டகாலமாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். மனைவிவழி உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பொதுக்காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
மகரம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியான வேலையை முடிப்பீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
கும்பம்: சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.
மீனம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் காணப்படும். ஆடம்பரச்செலவுகளை குறைத்து வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.