

மேஷம்: வறட்டு கவுரவத்துக்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆதரவு கிட்டும். லாபம் உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.
மிதுனம்: நெடுநாளாக அடைக்க முடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். வியாபாரம் லாபம் தரும்.
கடகம்: உற்றார் உறவினர் வீடு தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
சிம்மம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு நட்பை புதுப்பிப்பீர்கள். பூர்வீக சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
கன்னி: புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
விருச்சிகம்: எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவீர். திட்டமிட்ட பணியை அலைந்து திரிந்து முடிப்பீர். மனைவி வழியில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரப் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரிப்பர்.
தனுசு: நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். ஓரளவு லாபம் பார்ப்பீர்.
மகரம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பணவரவு உண்டு. அலுவலகத்தில் நிம்மதியுண்டு. அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரரீதியாக பயணம் மேற்கொள்வீர். பிரபலங்களை சந்திப்பீர்கள்.
கும்பம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு இருக்கும். கூட்டுத்தொழிலில் பாக்கிகள் வசூலாகும். அலுவலக பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் ஆதரிப்பர். புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.
மீனம்: நீண்டநாள் கனவுகள் நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்.