மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 டிசம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 டிசம்பர் 2025
Updated on
2 min read

மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கவனம் அவசியம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனை களால் பெருமையடைவீர். சோர்வு நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.

கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க போராடுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் எதிலும் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கவும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு தருவர். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் ஊழியர்கள் மதிப்பர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

துலாம்: புதிய எலட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பூர்வீக வீடு, விவசாய நிலத்தை விற்பீர்கள். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

விருச்சிகம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிக்க போராடுவீர்கள். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். பங்குதாரர் பணிவார்.

தனுசு: பணவரவு உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய பயம் விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரை அலட்சியப்படுத்தாதீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தைரியமான முடிவுகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும்.

கும்பம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். பணவரவு கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பெரியளவில் வெற்றி காண்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தும் சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரர்கள் உங்கள் பேச்சை கேட்பர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 டிசம்பர் 2025
பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் பட்டத்து இளவரசர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in