

மேஷம்: மனநிறைவு, நம்பிக்கை, உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள். எக்காரியத்திலும் கவனம் தேவை. பிள்ளைகளால் திடீர் பயணம், அலைச்சல் இருக்கும். வாகனம் செலவு வைக்கும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
ரிஷபம்: விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். டென்ஷன் குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். பண வரவு உண்டு.
மிதுனம்: தடைபட்டுவந்த காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். தொழில், வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.
கடகம்: வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். உடல்நலம் சீராகும். பொருட்கள் சேரும்.
சிம்மம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. வீட்டில் பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு, கடை விரிவாக்கத்துக்கு கேட்டிருந்த கடன் உதவி கிடைக்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டு.
கன்னி: குடும்பத்தினரால் மனநிம்மதி கிடைக்கும். கடன் பிரச்சினை சுமுகமாக தீரும். வெளி வட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். அலு வலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு, பாராட்டு பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
துலாம்: வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணங்கள், பரிசுப் பொருட்கள், முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். பேச்சில் நிதானம் அவசியம். வெளி நபர்களிடம் சொந்தப் பிரச்சினைகளை பேச வேண்டாம். பல வகையிலும் பண வரவு உண்டு.
விருச்சிகம்: நீண்டகால ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும்.
தனுசு: சாதுர்யமாகப் பேசி வேலைகளை முடிப்பீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரி ஆதரவாக இருப்பார். வெளியூர் பயணத்தால் உற்சாகமடைவீர்கள். கணவன் - மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.
மகரம்: வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்துபேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.
கும்பம்: உங்கள் பேச்சில் நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம்.
மீனம்: இனம்புரியாத அச்சம், கவலை ஏற்படும். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மாலைக்குப் பிறகு தேவையற்ற சஞ்சலங்கள் ஓய்ந்து மனம் நிம்மதியடையும். நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.