

மேஷம்: தடைப்பட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
ரிஷபம்: எடுத்த வேலையை முடிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களின்போது மிகுந்த கவனம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மிதுனம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கடகம்: உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த தொகை கைக்கு வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.
சிம்மம்: பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மனதில் புத்துணர்ச்சி காணப்படும். விஐபி ஒருவரைச் சந்திப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
கன்னி: பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் இருந்தாலும் நன்மை ஏற்படும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் செல்லும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.
துலாம்: குடும்பத்தில் குதூகலம் காணப்படும். அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். விலகியிருந்த உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.
விருச்சிகம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.
தனுசு: முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். குடும்பத்தில் குழப்பமான சூழல் காணப்படும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். வெளியூர் பயணம் அலைச்சலைத் தரும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.
மகரம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சியைத் தரும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். தாயார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
கும்பம்: வேற்றுமொழி, மதத்தினரால் திடீர் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
மீனம்: விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.