

மேஷம்: குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய்வழி உறவினர்களால் அலைச்சல் கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவுண்டு. வியாபார போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளின் சாதனை களால் பெருமையடைவீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு.
கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். ஆன்மிக பயணத்தால் மகிழ்ச்சியும், மனநிம்மதியும் கிட்டும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்.
சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். உடன் பிறந்தவர்களின் உதவியுடன் பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.
கன்னி: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். பூர்வீக சொத்து தொடர்பான வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.
துலாம்: மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். மகனின் எதிர்காலத்தை நினைத்து வருந்துவீர். யாரையும் எடுத்தெறிந்து பேசுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்: பணவரவு ஓரளவு திருப்தி தரும். பழைய கடன்களை பைசல் செய்வீர். தாய்வழி உறவினர்களுடன் இருந்த ஈகோ பிரச்சினை நீங்கும். புதிய பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக அமைந்து லாபம் பார்ப்பீர்.
தனுசு: பூர்வீக சொத்து வழக்கு இழுபறியாக வாய்ப்பு உண்டு. உடன் பிறந்தவர்களுடன் பேசிப் பார்ப்பது நல்லது. பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். அலுவலத்தில் பணிச்சுமை குறையும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்.
கும்பம்: சுறுசுறுப்புடன் செயல்படுவீர். வாகனத்தை மாற்றுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். லாபம் கிட்டும்.
மீனம்: திட்டமிட்ட பணிகளை முடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக நிலம், வீடு ஆகியவற்றை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.