

மேஷம்: மனதுக்கு பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
ரிஷபம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கொடுத்த வாக்கை நிறை வேற்றுவீர். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். பிரபலங்கள் அறிமுகமாவர். உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
மிதுனம்: மனைவியின் உடல்நலம், மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், டென்ஷன் வரக் கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகரீதியான பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கடகம்: பழைய நினைவுகள் மகிழ்ச்சி தரும். மனநிம்மதி பிறக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
சிம்மம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டு. வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.
கன்னி: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். கணவன் - மனைவிக்குள் நிம்மதியுண்டு. பணப் புழக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி ஒற்றுமை பிறக்கும். அக்கம்பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போகவும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், பிள்ளைகளால் செலவு உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உழைப்புக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
மகரம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். உறவினரால் மனநிம்மதி கிட்டும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை விலகும். நினைத்த காரியம் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். அலைச்சல் குறையும். வியாபாரரீதியாக வெளியூர் செல்வீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மீனம்: திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்கள்.