

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவர். பணப்புழக்கம் திருப்தி தரும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.
ரிஷபம்: எதிர்மறை எண்ணங்கள் வரக் கூடும். எதிலும் நிதானமாக செயல்படவும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளவும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
மிதுனம்: பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். மனைவிக்கு இருந்து வந்த சுவாசக் கோளாறு, சைனஸ் பிரச்சினை நீங்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கடகம்: இங்கிதமாக பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். தாயாரின் உடல்நலம் சீராகும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
சிம்மம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.
கன்னி: புது வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
துலாம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். பூர்வீக சொத்து வழக்கில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்: குடும்பத்தில் வாக்குவாதங்கள் வந்து போகும். நெருங்கியவரிடம் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் முடிவு எடுப்பதில் அவசரம் வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய வேலைக்குச் செல்ல திட்டமிடுவீர்.
தனுசு: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியங்கள் கை கூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். லாபம் கிட்டும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.
மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
கும்பம்: தந்தைவழியில் அனுகூலம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபார ரீதியாக பயணம் செல்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். வியாபாரரீதியாக சில மாற்றங்களை செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள்.