மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 மார்ச் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 மார்ச் 2026
Updated on
2 min read

மேஷம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு கூடும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும்.

ரிஷபம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

சிம்மம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர். பங்குதாரரின் கருத்துகளை நிராகரிக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

கன்னி: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவார்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வாகனத்தை மாற்றுவீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். புதிய யுக்திகளை கையாண்டு அனைத்து வாடிக்கையாளர்களையும் கவருவீர்.

துலாம்: பணவரவு உண்டு. அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். வியாபாரத்தில் கொஞ்சம் யோசித்து செயல்படவும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் காண்பீர். கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவர்.

தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு திருமணப் பேச்சுவார்த்தை கூடி வரும். அக்கம்பக்கத்தினரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மகரம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். காரியத்தடைகள் வரக் கூடும். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபார போட்டிகளை சமாளிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். பொறுப்புகள் கூடும்.

மீனம்: திட்டமிட்ட வேலையை முடிக்க வேகத்தை அதிகரிப்பீர். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 மார்ச் 2026
ஜோதிட நாள்காட்டி 03.03.2026 | மாசி 19 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in