மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 பிப்ரவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 பிப்ரவரி 2026
Updated on
2 min read

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய நபர்களை சந்திப்பதால் அனுகூலம் உண்டு.

ரிஷபம்: பண வரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். வாகனச் செலவு குறையும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மிதுனம்: தள்ளிப்போன சுப காரியங்கள் கைகூடி வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது. நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

கடகம்: உடல் சோர்வு, கவலையால் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளிப்பீர்கள். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. பேச்சில் பொறுமை அவசியம்.

சிம்மம்: உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்கள் ரசனைக்கு ஏற்ப வீடு, வாகனம் அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். பொருட்கள் சேரும்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

துலாம்: நம்பிக்கை, உற்சாகத்துடன் செயல்பட்டு காரியங்களை விறுவிறுப்பாக முடிப்பீர்கள். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வெளியூர் பயணங்களால் செலவு இருந்தாலும், அனுகூலமும் உண்டாகும்.

விருச்சிகம்: பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீடு, கடையை விரிவுபடுத்துவீர்கள். அரசு, வங்கி வகையில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு: வருங்கால வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று காசாக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

மகரம்: இங்கிதமாக, சாதுர்யமாகப் பேசி, வேலையை முடிப்பீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள். திடீர் பயணம், அலைச்சல், அசதி இருக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். நாடி வந்தவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

கும்பம்: பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். தடைபட்ட அரசு வேலைகள் முடியும். குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள்.

மீனம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படுவீர்கள், முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வியாபார வளர்ச்சிக்காக சில மாற்றங்களை செய்வீர்கள். இழுபறியாக இருந்த காரியங்கள் முடியும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 பிப்ரவரி 2026
ஜோதிட நாள்காட்டி 16.02.2026 | மாசி 04 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in