

மேஷம்: உங்களின் அணுகுமுறையை மாற்றி தடைபட்ட வேலையை முடிப்பீர்கள். சகோதரியின் விசேஷத்துக்கு அதிகம் உழைப்பீர். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பங்குதாரர்கள் ஆதரவு தருவார்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
ரிஷபம்: பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். குடும்ப உறுப்பினர்களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: நம்பிக்கைக்கு உரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும். பழைய நண்பர்கள் வீடு தேடி வருவர். வாகனத்தை சீர் செய்வீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கவும். வியாபாரம் சிறக்கும்.
கடகம்: மறைமுக எதிர்ப்பு விலகும். உங்கள் செயலை பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். குடும்பத்தில் நிம்மதி தங்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையை ஏற்று புது இடத்துக்கு கடையை மாற்றுவீர். நல்ல லாபம் கிட்டும். அலுவலகத்தில் எதிலும் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும் கையிருப்பு கரையக்கூடும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வாகனத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.
கன்னி: புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குலதெய்வ பிரார்த்தனை நிம்மதி தரும். வியாபார போட்டிகளை எளிதாக சமாளிப்பீர்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
துலாம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிட்டும்.
விருச்சிகம்: குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல் பேச்சு கேட்பர். தாயாரின் உடல் நலம் நிம்மதி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரம் லாபம் தரும்.
தனுசு: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தூக்கமின்மை, மன உளைச்சல் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உதவி நாடி வருவர். குழப்பம் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு. வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
மகரம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவுகள், டென்ஷன் இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கேற்ப செயல்படுவீர். உறவினர், நண்பர்கள் உங்களை பெருமையாக பார்ப்பர். சொந்த ஊர் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: தெளிவாகப் பேசி சில வேலைகளை முடித்துக் காட்டுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வங்கியில் வாங்கிய கடனை பைசல் செய்வீர். வியாபாரம் சிறக்கும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.