மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 06 நவம்பர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 06 நவம்பர் 2026
Updated on: 
1 min read

மேஷம்: பொது விவாதங்​களில் வெற்றி பெறு​வீர்​கள். மனஇறுக்​கம் நீங்​கும். விஐபிகள் மத்​தி​யில் செல்​வாக்கு கூடும். வியாபாரத்​தில் லாபம் உண்டு. புதிய யுக்​தி​களை கையாண்டு பழைய வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர். உத்​தி​யோகம் சிறக்​கும்.

ரிஷபம்: பிரபலங்​களுக்கு நெருக்​க​மாவீர்​கள். பழைய வழக்​கில் வெற்றி பெறு​வீர். வெளிவட்​டாரத்​தில் முக்​கிய பத​விக்கு தேர்வு செய்​யப்​படுவீர். அலு​வல​கத்​தில் உயரதி​காரி​கள் பாராட்​டுவர். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​களை அனுசரித்​துச் செல்​ல​வும்.

மிதுனம்: வேற்​றுமொழி, மதத்​தினர்​களால் திருப்​பம் உண்​டாகும். தந்​தைவழி உறவினர்​களால் ஆதாயமுண்டு. குடும்​பத்​தினரின் விருப்​பங்​களை நிறைவேற்​று​வீர்​கள். அலு​வல​கத்​தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்​தில் வெற்றி பெறு​வீர்​கள்.

கடகம்: ஈகோ பிரச்​சினை தீர்ந்து தம்​ப​திக்​குள் அனுகூலம் உண்டு. நீண்ட நாட்​களாக எதிர்​பார்த்து காத்​திருந்த அயல் நாட்டு பயணம் சாதக​மாக அமையும். வியாபாரத்​தில் பழைய வாடிக்​கை​யாளர்​கள் மீண்​டும் வரு​வார்​கள். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும்.

சிம்​மம்: உங்​கள் செயலில் வேகம் கூடும். பணப் பற்​றாக் குறையை சாமர்த்​தி​ய​மாக சமாளிப்​பீர். பழைய வீட்டை புதுப்​பிக்​கும் முயற்​சி​யில் இறங்​கு​வீர். பிள்​ளைகள் பொறுப்​புடன் செயல்​படுவர். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர். வியாபாரம் சூடு பிடிக்​கும்.

கன்னி: ராசிக்​குள் சந்​திரன் இருப்​ப​தால் ஒரு​வித படபடப்பு வந்து செல்​லும். கணவன் - மனைவிக்​குள் ஈகோ பிரச்​சினை வந்து நீங்​கும். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​கவும். வியாபாரத்​தில் பழைய பாக்​கி​களை போராடி வசூலிப்​பீர்.

துலாம்: உறவினர் மத்​தி​யில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்​சிகளில் கலந்து கொள்​வீர்​கள். அலு​வல​கத்​தில் உங்​களின் நிர்​வாகத் திறன் அதி​கரிக்​கும். மேலதி​காரி​களின் பாராட்​டைப் பெறு​வீர். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​களை பகைத்​துக் கொள்​ளாதீர்.

விருச்​சிகம்: குடும்​பத்​தில் அடுத்​தடுத்து சுப நிகழ்ச்​சிகள் ஏற்​பாடாகும். கல்​வியாளர், அறிஞர்​களின் நட்​பால் தெளிவடைவீர். வியாபாரத்​தில் புது யுக்​தி​களை கையாளுவீர்​கள். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும். சக ஊழியர்​கள் மதிப்​பர்.

தனுசு: தாய்​வழி உறவினர்​களு​டன் இருந்த மனஸ்தாபம் வில​கும். திட்​ட​மிட்ட காரியங்​களை சிறப்​பாக முடிப்​பீர். பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்துவீர்​கள். அலு​வல​கத்​தில் மூத்த அதி​காரி​கள் ஆதர​வாக இருப்​பர். வியாபாரத்​தில் பணி​யாளர்​களை அன்​பாக நடத்​துங்​கள்.

மகரம்: தடைபட்ட வேலைகளை முடித்​துக் காட்​டுவீர். குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும். உறவினர், நண்​பர்​கள் தேடி வந்​துப் பேசுவார்​கள். வியாபாரரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திப்​பீர்​கள். அலு​வல​கத்​தில் விவாதங்​களைத் தவிர்ப்​பது நல்​லது.

கும்​பம்: சந்​திராஷ்டமம் நடப்​ப​தால் அதிரடி​யான முடிவு​களை எடுக்​காதீர்​கள். திடீர் பயணங்​கள், செல​வு​கள் இருக்​கும். அரசு விவகாரங்​களில் அலட்​சி​யம் வேண்​டாம். அலு​வல​கத்​தில் புதிய பத​விக்கு பரிந்​துரைக்​கப்​படுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்​கலாம்.

மீனம்: துணிச்​சலாக சில முக்​கிய முடிவு​கள் எடுப்​பீர்​கள். பிள்​ளைகளின் உடல்​நலம் சீராகும். பணப் புழக்​கம் கூடும். உடன்​பிறந்​தவர்​கள் உறுதுணை​யாக இருப்​பர். கடையை வேறு இடத்​துக்கு மாற்​று​வீர். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 06 நவம்பர் 2026
ஜோதிட நாள்காட்டி 06.11.2026 | ஐப்பசி 20 - வெள்ளிக்கிழமை

X