மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 05 நவம்பர் 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 05 நவம்பர் 2026
Updated on: 
2 min read

மேஷம்: புதுப் புது யோசனைகளை தந்து உங்​களைச் சுற்றி​யிருப்​பவர்​களை அசத்​து​வீர். பாதி​யில் நின்ற பணிகள் முடியும். நவீன மின்​னணு, மின்​சார சாதனங்​கள் வாங்​கு​வீர். வியாபாரத்​தில் பழைய பாக்கி வசூலாகும். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது.

ரிஷபம்: மக​னின் படிப்பு, மகளின் திரு​மணம் குறித்து அலைச்​சல், டென்​ஷன் வரலாம். தாயாரின் மருத்​துவ செலவு குறையும். மனைவிவழி உறவினர்​களு​டன் ஈகோ பிரச்​சினைகள் நீங்​கும். அலு​வல​கத்​தில் தேடிய ஆவணம் தென்​படும். வியாபாரத்​தில் போட்​டிகளை சமாளிப்​பீர்.

மிதுனம்: குடும்​பத்​தில் மகிழ்ச்சி உண்​டாகும். உங்​கள் பேச்​சில் அனுபவ அறிவு வெளிப்​படும். வேற்​றுமொழி பேசுபவர்​களால் நல்​லது நடக்​கும். விரயச் செல​வு​கள் குறையும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முற்​படுவீர். அலு​வல​கத்​தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கடகம்: சவாலான விஷயங்​களை​யும் சாதா​ரண​மாக செய்து முடிப்​பீர். குடும்​பத்​தினர் உங்​கள் பேச்​சுக்கு செவி சாய்ப்​பர். திடீர் பயணங்​கள் உண்டு. பழைய நண்​பர்​கள், உறவினர்​களை சந்​திப்​பீர். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு வெல்​வீர். உத்​தி​யோகம் சிறக்​கும்.

சிம்​மம்: எதையும் தாங்​கும் மனவலிமை கிட்​டும். சகோ​தரர்​கள் பக்​கபலமாக இருப்​பார்​கள். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர். வியாபாரத்​தில் பங்​குதா​ரர்​களின் ஆலோ​சனைகளை ஏற்று செயல்​பட​வும். எதிர்ப்​பு​களை முறியடித்து வெல்​வீர்​கள்.

கன்னி: ராசிக்​குள் சந்​திரன் தொடர்​வ​தால் விவாதங்​களை தவிர்ப்​பது நல்​லது. பெற்​றோரின் அறி​வுரைகளை ஏற்று செயல்​பட​வும். பணிச்​சுமை அதி​கரிக்​கும். வியாபார ரீதி​யாக முக்​கிய பிர​முகர்​களை சந்​திப்​பீர். புதிய ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திடுவீர். லாபம் பார்க்​கலாம்.

துலாம்: வெளியூர் பயணங்​கள் திருப்தி தரும். நீண்ட நாள் பிரச்​சினைகளுக்கு தீர்வு காண்​பீர்​கள். யோகா, தியானத்​தில் மனம் செல்​லும். நவீன மின்​னணு சாதனங்​கள் வாங்​கு​வீர். அலு​வல​கத்​தில் அமைதி காக்​கவும். வியாபாரம் விறு​விறுப்​பாக நடக்​கும்.

விருச்​சிகம்: புது ஆடை ஆபரணங்​களில் மனம் லயிக்​கும். தாய்​வழி உறவினர்​களால் ஆதாயம் உண்டு. முக்​கிய பிர​முகர்​களின் வீட்டு விசேஷங்​களில் கலந்து கொள்​வீர். அலு​வல​கத்​தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்​கவும்.

தனுசு: இலக்கை நோக்கி முன்​னேறு​வீர். அழகு, இளமை கூடும். சமூகத்​தில் அந்​தஸ்து உயரும். குடும்​பத்​தில் நல்​லது நடக்​கும். பிள்​ளைகள் படிப்​பில் ஆர்​வம் காட்​டுவர். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர். உத்​தி​யோகம் சிறக்​கும்.

மகரம்: மனக்​குழப்​பம் நீங்கி தெளிவு பிறக்​கும். தாயாரின் உடல்​நலத்​தில் முன்​னேற்​றம் உண்டு. புண்​ணிய தலங்​கள் சென்று வரு​வீர். பூர்​வீக வீட்டை சீரமைப்பீர்கள். அலு​வல​கத்​தில் உயரதி​காரி நண்​பர்​களாவர். வியாபாரத்​தில் கடையை வேறு இடத்​துக்கு மாற்​று​வீர்.

கும்​பம்: முன்​கோபத்தை கட்​டுப்​படுத்​திக் கொள்​ளவும். அடுத்​தவர்​களை குறை கூறு​வதை தவிர்க்​கவும். பூர்​வீக வீடு, மனை விற்​பனையாகும். வியாபாரத்​தில் குழப்​பங்​களை சமாளிக்க வேண்​டிவரும். அலு​வல​கத்​தில் அமைதி காப்​பது நல்​லது.

மீனம்: தைரிய​மாக சில முக்​கிய முடிவு​கள் எடுப்​பீர்​கள். நண்​பர்​கள் உதவி​கர​மாக இருப்​பார்​கள். சகோ​தரர்​கள் பக்​கபலமாக இருப்​பர். வியாபாரத்​தில் போட்​டிகளை சமாளித்து வெல்​வீர். அலு​வல​கத்​தில் அடுத்​தவர் விஷயத்​தில் தலையிடாமல் இருக்கவும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 05 நவம்பர் 2026
ஜோதிட நாள்காட்டி 05.11.2026 | ஐப்பசி 19 - வியாழக்​கிழமை

X