

மேஷம்: தடைபட்ட வேலைகள் முழுமையடையும். சோர்வு நீங்கிபுத்துணர்ச்சியுடன் செயல்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வியாபாரரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நன்மை தரும்.
ரிஷபம்: தம்பதிக்குள் சிறு சிறு கருத்துமோதல் வந்து போகும். யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.
மிதுனம்: நீண்டநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
கடகம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபகாரியம் கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வெளிவட்டாரத்தில் மதிப்புயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். புதிதாக எலட்க்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அக்கம் பக்கத்தினரிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும்.
விருச்சிகம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு உண்டு. குழப்பங்கள் தீர்ந்து குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல் நிலை சீராகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.
தனுசு: நீங்கள் எடுக்கும் தைரியமான முடிவுகளை, குடும்பத்தினர் பாராட்டுவர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தாயாரின் உடல்நலம் சீராகும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும்.
மகரம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகை உண்டு. வீண் செலவுகள் குறையும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். பூர்வீக சொத்து வழக்கு முடிவுக்கு வரும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர். பணவரவு திருப்தி தரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிகவாதிகளை தரிசித்து ஆசி பெறுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி காண்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
மீனம்: கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர். பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறாதீர்கள்.