மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஜனவரி 2026
Updated on
2 min read

மேஷம்: உற்சாகத்துடன் செயல்பட்டு, இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதில் குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். உடல் நலம் சீராகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, சேமிப்பை அதிகரிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பண வரவு உண்டு.

ரிஷபம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் ஏற்பட்டு வந்த அன்புத்தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு. பழுதான மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவி வழி உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். அலுவலகப் பணியாளர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

கடகம்: உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். நட்வட்டாரம் விரிவடையும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறை வேற்றுவீர்கள். உடல்நலம் சீராகும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும். வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

சிம்மம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அலைச்சல், டென்ஷன் விலகும். பிள்ளைகளால் மரியாதை கூடும். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பங்குதாரர்கள் ஒருமித்து செயல்படுவார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கன்னி: நீண்டகாலமாக தடைபட்ட காரியங்கள் சுமுகமாக நடைபெறும். சொந்த பந்தங்கள் மத்தியில் மரியாதை கூடும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். பல வகயிலும் பொருட்கள் சேரும். பேச்சில் பொறுமை தேவை.

துலாம்: சின்னச் சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும். மகான்களின் தரிசனம், பெரியோர் ஆசி கிடைக்கும்.

விருச்சிகம்: கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்பும். தாய் உடல்நலம் சீராகும். தொழிலை விரிவுபடுத்த பண உதவி கிடைக்கும். யாரிடமும் வீ்ண் பேச்சுகள், வாக்குவாதங்கள் வேண்டாம்.

தனுசு: மன நிம்மதியுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பணிகளை சுறுசுறுப்பாக முடித்து, உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள்.

மகரம்: வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் கலந்து பேசி, முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் பல வகையிலும் மதிப்பு, மரியாதை உயரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம், நகைகள், முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள்.

கும்பம்: போட்டிகள், சவால்களைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வீர்கள். பண வரவு உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள்.

மீனம்: மனதில் தேவையற்ற அச்சம், கவலைகள் வந்து நீங்கும். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். திடீர் வெளியூர் பயணங்கள் வரும். அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு. கலைப் பொருட்கள் சேரும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஜனவரி 2026
ஜோதிட நாள்காட்டி 12.01.2026 | மார்கழி 28 - விசுவாவசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in