மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026
Updated on
2 min read

மேஷம்: எதிர்பாராத இடத்தில் இருந்து உரிய நேரத்தில் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். பழைய சொந்த பந்தங்கள் தேடிவருவார்கள். உத்யோகத்தில் பணிச் சுமை குறையும்.

ரிஷபம்: வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். திருமணப் பேச்சு வெற்றியடையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.

மிதுனம்: தடைபட்ட வேலையை உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில பிரச்சினைகளுக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணர்ந்து திருத்திக் கொள்வீர்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்: நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடன் உதவி கிடைக்கும். அரசு, வங்கி சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

சிம்​மம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பல வகையிலும் பணம் சேரும். யாரிடமும் வீண் பேச்சுகள் வேண்டாம்.

கன்னி: வெளியூர் பயணத்தால் அலைச்சல், அசதி உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நிதானம் தேவை. புதிய முடிவுகள் எடுக்கும்போது யோசித்து செயல்படவும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும்.

துலாம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் மன நிம்மதி கிடைக்கும். பெற்றோர் உடல்நிலை சீராகும். அலைச்சல், டென்ஷன் குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகப் பணியை விறுவிறுப்பாக முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

விருச்​சிகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான டிவி ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். வியாபாரத்தில் வராது என்று நினைத்த பழைய கடன் கைக்கு வந்துசேரும்.

தனுசு: சொந்த பந்தங்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உடல்நலம் சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் விலகும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.

மகரம்: எல்லா வேலைகளையும் நீங்களே இழுத்துப்போட்டு பார்ப்பீர்கள். குடும்பத்தில் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும்.

கும்​பம்: வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். பல வகையிலும் பண வரவு, பொருள் வரவு உண்டு.

மீனம்: எதிர்பார்த்த உதவிகள், வாய்ப்புகள் தாமதமாகும். பேச்சில் கவனம் தேவை. பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை கூடும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கு இந்த வார பலன்கள் @ ஜூலை 16 - 22

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in