மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 ஜனவரி 2026
Updated on
2 min read

மேஷம்: மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உடல்நலம் நிம்மதி தரும். வருங்காலத்துக்காக சேமிப்பீர். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வெளியூர் பயணங்கள் திருப்தி தரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பணவரவு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.

மிதுனம்: வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போகவும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். மனைவிவழி உறவினரால் நிம்மதி கிட்டும். உடல் சோர்வு ஏற்படும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கடகம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவர். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையை கண்டு எல்லோரும் அதிசயிப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். விவாதம் தவிர்ப்பீர்.

சிம்மம்: குடும்ப உறுப்பினர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்கவும். செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வாகனத்தை மாற்றுவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.

கன்னி: திட்டமிட்ட பணியை முடிப்பீர். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். குடும்ப உறுப்பினரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபார ரீதியாக சிலரது உதவி கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் கிடைப்பார்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்.

துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகத்தில் ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

விருச்சிகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

தனுசு: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து நிம்மதியுண்டு. அதிரடியான முடிவுகளை எடுத்து சுற்றியிருப்பவர்களை வியக்க வைப்பீர். பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

மகரம்: உங்களது உற்சாகமான பேச்சை அனைவரும் ரசிப்பர். பணவரவு கூடும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கும்பம்: உடல் உஷ்ணம் கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் போக்கு கவலை அளிக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

மீனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்து கொள்ள வேண்டாம். இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 ஜனவரி 2026
10, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in