

சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் ஜன. 9, 10-ல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் ஜன.9, 10-ம் தேதிகளில் கல்வி மாவட்ட வாரியாக உள்ள தேர்வுத் துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைக்க வேண்டும். அதில் உள்ள எண்ணைக் கொண்டே மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.