

மேஷம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களையும் சரியாகப் பயன்படுத்தி, காரியம் சாதிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்திருக்கும் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.
ரிஷபம்: வெளி வட்டாரத்தில் யாரிடமும் அநாவசியப் பேச்சுகள் வேண்டாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் வந்துபோகும். தொழில், வியாபாரம், அலுவலகப் பணிகளில் அதிக கவனம் தேவை. ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு உண்டாகும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். தக்க சமயத்தில் ஓடிவந்து உதவுவார்கள்.
கடகம்: பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடை வீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் உண்டாகும். அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.
சிம்மம்: வெளியூர் பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்கும். உற்சாகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
கன்னி: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்கள், அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி தங்கும். சகோதர உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பதவி, பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
துலாம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மோதல் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். பல வகையிலும் பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: நம்பிக்கை, தைரியத்துடன் செயல்பட்டு, முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள்.
தனுசு: மன இறுக்கம், குழப்பங்கள் வந்துபோகும். குடும்பத்தில் நிதானத்தைக் கடைபிடியுங்கள். நீண்டதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு கூடும்.
மகரம்: நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக முக்கியப் பிரமுகர்களை சந்திப்பீர்கள். பல வகையிலும் உங்கள் சேமிப்பு அதிகரிக்கும்.
கும்பம்: எந்த பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் தைரியம், மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களுடன் நட்பு மலரும். மனதில் புதிய தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள்.
மீனம்: தைரியமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதர உறவுகள் தக்க சமயத்தில் கைகொடுப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பேச்சில் பொறுமை தேவை.