

மேஷம்: நண்பர்கள் ஆதரவாக இருப்பர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். செலவுகள் இருக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.
ரிஷபம்: மனக் குழப்பங்கள் வந்து போகும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பர். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.
மிதுனம்: சவாலான விஷயங்களை சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். செல்வம், செல்வாக்கு கூடும். போட்டிகள், விவாதங்களில் வெற்றி பெறுவீர். முக்கிய பிரமுகர்களால் பயனடைவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: பணவரவு உண்டு. குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் தங்கும். சுற்றுலா பயணங்கள் திருப்தி தரும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர். மனஸ்தாபம் தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
சிம்மம்: மனநிம்மதி கிட்டும். முன்கோபம் குறையும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழும். அலுவலகரீதியாக பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது.
கன்னி: புது முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.
துலாம்: மனதைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். சாதுர்யமாக பேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். எதிர்பாராத நேரத்தில் பணம் வரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. பயணங்களால் அலைச்சல் இருக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு வரும். வியாபாரத்தில் யாருக்கும் எந்த வகையிலும் உறுதிமொழி தர வேண்டாம். உத்தியோகம் சிறக்கும்.
தனுசு: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். வெளியூர் பயணம் திருப்தி தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்: நவீன மின்னணு, மின்சார சாதனம் வாங்குவீர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தாரின் பேச்சுக்கு செவி சாய்ப்பீர். அக்கம் பக்கத்தினர் ஆதரவு தருவர். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
கும்பம்: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் லாபம் கூடும்.
மீனம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவி கிட்டும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூற வேண்டாம். வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வீர்.