

மேஷம்: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
ரிஷபம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். மனவலிமையுடன் எதையும் முடித்துக் காட்டுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
மிதுனம்: கையில் பணம் புரளும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கடகம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்.
சிம்மம்: முன்கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவர். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபமுண்டு. வியாபார நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கன்னி: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவைத் தரும். பழைய நண்பர்கள் தேடி வருவர். புது வாகனம் வாங்குவீர். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலக மேலதிகாரிகள் ஆதரவு தருவர்.
துலாம்: தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.
விருச்சிகம்: முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும்.
தனுசு: பணவரவு உண்டு. மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். அலுவலக குழப்பம் நீங்கும். பணிகளில் இருந்த தொய்வு விலகும். மேலதிகாரிகள் ஆதரிப்பர்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கும்பம்: திட்டமிட்ட வேலையை முடிக்க வேகத்தை கூட்டுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
மீனம்: பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். குடும்பத்தினர் மத்தியில் இருந்த குழப்பம் நீங்கும். நேர்கொண்ட பார்வையுடன் முடிவெடுப்பீர். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.