மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 மே 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 மே 2026
Updated on
2 min read

மேஷம்: தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர். வியாபாரத்தில் இருந்த அலைச்சல் விலகும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். சக ஊழியர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

ரிஷபம்: புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு. பிள்ளைகள் குடும்ப சூழலறிந்து செயல்படுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

மிதுனம்: முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது நீங்கள் பாராட்டப்படுவீர். உறவினர் மத்தியில் மதிப்புயரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகரீதியாக பயணம் செல்வீர். வியாபாரத்துக்காக புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். லாபம் கிட்டும்.

கடகம்: பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். குடும்பத்தினரை அனுசரித்து நடப்பது நல்லது. அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

சிம்மம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்களை விரைந்து முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைத் திறன் கூடும். தாயார், மனைவியின் ஆரோக்கியம் சீராகும். வியாபாரம் நல்ல லாபம் தரும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

கன்னி: முக்கிய முடிவுகளை கவனமாக, நிதானமாக எடுக்கவும். இல்லத்தில் முதியவர்களின் சொல்பேச்சை கேட்டு செயல்படவும். வியாபாரத்தில் பணியாட்களால் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

துலாம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: தள்ளிப் போய்கொண்டிருந்த சுபகாரியம் கை கூடி வரும். பணவரவு திருப்தி தரும். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள்.

தனுசு: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர். தோற்றப் பொலிவுகூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். அலுவலகரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டி குறையும். பங்குதாரர் ஆதரிப்பார்.

மகரம்: குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர். பிள்ளைகளால் பெருமையடைவீர். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களிடம் பணிவார்கள். நண்பர்களின் உதவியுடன் புது வேலை கிட்டும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்புகள் கூடும்.

மீனம்: மகனின் படிப்பு, மகளின் திருமணம் என்று அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பால்ய நண்பர்களால் செலவுகள் இருக்கும். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர். பங்குதாரரின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 27 மே 2026
ஜோதிட நாள்காட்டி 27.05.2026 | வைகாசி 13 - புதன்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in