மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 ஜனவரி 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 ஜனவரி 2026
Updated on
2 min read

மேஷம்: நினைத்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

மிதுனம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினருடன் இருந்தமோதல் விலகும். வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்குகள் விற்றுத்தீரும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள்.

கடகம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். முக்கிய திட்டங்களை தள்ளிப்போடுவது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் அவப்பெயர் ஏற்படக் கூடும். எதிலும் நிதானமுடன். செயல்படுங்கள். தாயாரின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்: எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். புது தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அக்கம்பக்கத்தினர் உங்கள் உதவியை நாடுவர்.

கன்னி: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்வது நல்லது. வீட்டுக்குத் தேவையான மின் சாதனங்கள் வாங்குவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.

துலாம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவாக இருப்பார்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். ஆலோசனைகளை கேட்கவும். உத்தியோகம் சிறக்கும்.

விருச்சிகம்: அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப்போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஏற்படும்.

தனுசு: உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பிள்ளை களால் செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. மனதில் ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் எரிச்சலைத் தரும். கலைப்பெருட்கள் வாங்குவீர்கள்.

மகரம்: எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். எதிர்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். வெளியூர் பயணம் திருப்தி தரும்.

கும்பம்: சின்னச்சின்ன சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி காரியங்களை சாதித்து விடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.

மீனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும். வருங்காலத்துக்கானமுக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு மனநிறைவை தரும். தடைபட்டிருந்த திருமணப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் வேகமெடுக்கும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 ஜனவரி 2026
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in