மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 மே 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 மே 2026
Updated on
2 min read

மேஷம்: உறவினர் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீட்டில் சுபகாரியம் ஏற்பாடாகும். வராதிருந்த உறவினர், நண்பர்கள் தேடி வருவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

மிதுனம்: புத்திசாலித்தனம் வெளிப்படும். பணவரவு திருப்தி தரும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். வீட்டில் அமைதி நிலவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்லுங்கள். யோகா, ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கடகம்: நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிட்டும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவைப் பெறுவீர்.

கன்னி: யாருக்காகவும் எதற்காகவும் எந்தவகையிலும் உறுதிமொழிதர வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் கவனம் தேவை. பங்குதாரரின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.

துலாம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வராக்கடன் வந்து சேரும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரம் சூடு பிடித்து லாபம் உண்டு.

விருச்சிகம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிட்டும். உற்சாகமான பேச்சால் வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

தனுசு: புது எண்ணங்கள் மனதில் தோன்றும். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. தடைகள் விலகும். உடன்பிறந்தோரின் ஆதரவு கிட்டும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரர்கள் உரிய அறிவுரை தருவர்.

மகரம்: மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். மனநிறைவுடன் சில பணிகளை செய்து முடிப்பீர். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பர். ஆன்மிகவாதிகளை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபார போட்டியை சமாளிப்பீர். பங்குதாரரின் அறிவுரையை கேட்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 மே 2026
ஜோதிட நாள்காட்டி 14.05.2026 | சித்திரை 31 - வியாழக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in