மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 மே 2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 மே 2026
Updated on
2 min read

மேஷம்: மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர். பணப்பற்றாகுறை விலகும். தாயின் உடல்நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம்.

மிதுனம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவால் சேமிப்பு கூடும். குடும்பத்தினருடன் சென்று நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பழைய சிக்கல்கள் விலகும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரால் மன நிம்மதி கிட்டும். உறவினர்கள், பழைய நண்பர்கள் தேடி வருவர். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களுடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். இல்லத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர். நவீன மின்சாதன பொருட்கள் வாங்குவீர். அக்கம்-பக்கத்தினரின் ஆதரவு பெருகும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

துலாம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பர். சுபநிகழ்ச்சி, விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். சேமிப்பை அதிகரிப்பீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

தனுசு: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிலும் நிதானம் தேவை. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மகரம்: அறிவுப்பூர்வமாக சிந்தித்து தெளிவான முடிவு எடுப்பீர். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். மனைவியின் உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து நடக்கவும்.

கும்பம்: விருந்தினர் வருகை உண்டு. குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். பொறுப்புகள் கூடும்.

மீனம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மனக்குழப்பம் விலகும். பேச்சில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 மே 2026
ஜோதிட நாள்காட்டி 07.05.2026 | சித்திரை 24 - வியாழக்கிழமை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in