

மேஷம்: திட்டமிட்ட வேலைகளை போராடி முடிப்பீர். குடும்பத்தில் சிறு சிறு கருத்து மோதல்கள் வரக் கூடும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களை குறை கூறாதீர்கள்.
ரிஷபம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில்புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். பங்குதாரரின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
மிதுனம்: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். தாயாரின் உடல்நலம் சீராகும். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி அனைவரையும் கவருவீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் சிலருக்கு பெரிய பொறுப்புகிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.
சிம்மம்: புதுப் புது யோசனைகளை தந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களை அசத்துவீர்கள். பாதியில் நின்ற வீட்டு கட்டுமானப் பணிகள் முடியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
கன்னி: பிள்ளைகளிடம் முன் கோபத்தை காட்டாதீர். பூர்வீக வீட்டைசீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பணியாட்கள் தொந்தரவு தருவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரி பாராட்டும் விதமாக நடப்பீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். பங்குதாரர் ஆதரிப்பார்.
தனுசு: மனதில் இருந்த பயம், தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் அடைவீர். வாகனத்தால் இனி வீண் செலவு இருக்காது. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மகரம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர். புது ஆடை, ஆபரணங்களில் மனம் லயிக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. பூர்வீக வீடு விற்பனையாகும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.
கும்பம்: கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்து காட்டுவீர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: பிள்ளைகளின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபமுண்டு.