

மேஷம்: சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணம் நன்மையைத் தரும்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத் தொல்லை, தூக்கமின்மை விலகும். வேலைச்சுமை குறையும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.
மிதுனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்டகால கடன் பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுவழி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டங்கள் தீட்டுவீர்கள்.
கடகம்: வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைப்பொருட்கள் வங்குவீர்கள்.
சிம்மம்: பணப்பற்றாக்குறை, வீண் டென்ஷன் வந்து போகும். வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். சிலருக்கு நல்லது செய்யப்போய் அது பிரச்சினையை உருவாக்கக் கூடும்.
கன்னி: குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். தக்க சமயத்தில் உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். விலையுயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வீட்டுக்குத் தேவையான மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்.
துலாம்: குடும்பத்தாரின் ஆசைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்புகூடும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் உயர்கல்வி குறித்து ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் நிலவிய வீண் குழப்பங்கள் விலகும். குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு: உங்கள் செயல்பாடுகளில் நிதானம் வெளிப்படும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். வியாபார ரீதியாக சிலரின் அறிமுகம் கிடைக்கும். தாயின் உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.
மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள்.
கும்பம்: நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
மீனம்: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். குடும்பத்தில் மூத்த வர்களின் ஆலோசனையைகேட்பதுநல்லது, யோகா, தியானத்தில்மனதைச் செலுத்துங்கள். நீங்கள் ஒன்றுசொல்லப் போய் மற்றவர்கள அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எதிலும் நிதானம் அவசியம்.