சங்கராபரணத்தில் மிளிர்ந்த காயத்ரி வெங்கடராகவன் | சென்னை இசை அரங்கம்

சங்கராபரணத்தில் மிளிர்ந்த காயத்ரி  வெங்கடராகவன் | சென்னை இசை அரங்கம்
Updated on
2 min read

சென்னை: மியூசிக் அகாட​மி​யின் இசை​விழா​வில் பங்​கேற்க வேண்​டும் என்று வெளி​நாடு​களில் இருந்​தும் ரசிகர்​கள், இசைக் கலைஞர்​கள் சென்னை வரு​வார்​கள். அதனால் இசை​விழா​வின்​போது மியூசிக் அகாடமி விழாக்​கோலம் பூண்டு விடு​கிறது.

சென்னை மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை ​விழா​வில் விதூஷி காயத்ரி வெங்​கட​ராகவனின் கச்​சேரி நடைபெற்றது. அவருக்கு பக்​கபல​மாக மைசூர் ஸ்ரீகாந்த் (வயலின்), ஆர்​.சங்​கர​நா​ராயணன் (மிருதங்​கம்), உடுப்பி எஸ்​.ஸ்ரீகாந்த் (கஞ்​சி​ரா) இருந்​தனர்.

‘ஸ்ரீமகா கணபதி ரவது​மாம்’ என்ற கௌளை ராக முத்​து சு​வாமி தீட்​சிதரின் க்ரு​தி​யுடன் கச்​சேரியைத் தொடங்​கி​னார் காயத்ரி வெங்​கட​ராகவன். அடுத்​த​தாக ‘ஸ்ரீ வைத்​ய​நாதம் பஜாமி’ என்ற முத்​துசு​வாமி தீட்​சிதரின் அடாணா ராக க்ரு​தி​யைப் பாடி​னார்.

ஹம்​ச​நாதம் ராகத்​தில் சிறிய ஆலாபனைக்​குப் பிறகு, தியாக​ராஜ சுவாமி​யின் பிரபல​மான ‘பண்​டுரீதி கோலு’ கீர்த்​தனையைப் பாடி​னார். ‘ராம நாம மனே’ என்ற வரி​யில் நிர​வல் செய்து ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார்.

‘உன் சந்​நி​தி​யைக் காவல் காக்​கும் பணி​யைக் கொடு’ என்று இந்த கீர்த்​தனை​யில் ஸ்ரீராமபி​ரானிடம் விண்​ணப்​பிக்​கிறார் தியாக​ராஜர். அதன்​மூலம் காமக்​ரோதம், லோபமோகம், மதமாச்​சரி​யம் ஆகிய​வற்றை அழிக்​கும் ஆற்​றலை தரு​மாறும் வேண்​டு​கிறார்.

இந்த கீர்த்​தனையை அடுத்​து, முத்​துசு​வாமி தீட்​சிதரின் ஆனந்​த ​பைரவி ராக க்ரு​தியை (தி​யாக​ராஜ யோக வைபவம்) பாடி​னார் காயத்ரி. இந்த க்ரு​தி​யில் கோபுச்ச யதி பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கும்.

இது, பசு​வின் வாலைப் போல தொடக்​கத்​தில் அகல​மாக​வும், போகப் போக குறுகி முடிவடை​யும் ஓர் அமைப்​பாகும். (தி​யாக​ராஜ யோக வைபவம் ராஜ யோக வைபவம் - யோக வைபவம் - வைபவம் - பவம்) கச்​சேரி​யின் பிர​தான ராக​மாக மத்​ய​மாவதி அமைந்​தது.

விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பிறகு, முத்​துசு​வாமி தீட்​சிதரின் ‘தர்​மசம்​வர்த்​தனி’ எனத் தொடங்​கும் க்ரு​தி​யைப் பாடி​னார். ‘மாதவ சோதரி சுந்​தரி மத்​ய​மாவதி சங்​கரி’ என்ற வரி​யில் நிர​வல் செய்​து, ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார்.

தனி ஆவர்த்​தனத்​தில் சங்​கர​நா​ராயணனுக்​கும், உடுப்பி ஸ்ரீகாந்​துக்​கும் இடையே இருந்த ஆரோக்​கிய​மான போட்​டி, ரசிகர்​களைக் கவர்ந்​தது. முத்​துத் தாண்​ட​வரின் சாவேரி ராகப் பாடலை (அய்​யனே நடனம் ஆடி) பாடி​விட்​டு, சங்​க​ராபரணம் ராகம் தானம் பல்​லவிக்கு சென்​றார் காயத்ரி.

உடுப்பி மகேஷ் பட்​டின், ‘அட்​சயலிங்க கங்​கோத்​த​மாங்க சதயாந்த ரங்க குரு சங்​க​ராபரண புஜங்க’ என்ற பல்​ல​வியை மிஸ்ர ஜாதி திரிபுட தாளத்​தில் சதுஸ்ர நடை​யில் பாடி​னார். ராக ஆலாபனை​களி​லும், ராகம் தானம் பல்​ல​வி​யிலும் வயலினில் மைசூர் ஸ்ரீகாந்த் தனது தனித்​து​வத்தை வெளிப்​படுத்​தி​னார்.

புரந்​தர​தாஸரின் ‘யாதவ தீப யதுகுல நந்​தன’ தேவர்​ நா​மா, சுப்​பிரமணிய பார​தி​யாரின் நாட்டு வணக்​கப் பாடல் ‘எந்​தை​யும் தாயும் மகிழ்ந்து குலா​வி’ ஆகிய​வற்​றைப் பாடி கச்​சேரியை நிறைவு செய்​தார் காயத்ரி வெங்​கட​ராகவன். விதூஷி பத்மா வீர​ராகவன், வித்​வான் ஏ.சுந்​தரேசன், வித்​வான் பி.எஸ்​.​நா​ராயணசு​வாமி ஆகியோரிடம் இசை பயின்ற காயத்ரி வெங்​கட​ராகவன், தற்​போது இந்​தி​யா மட்​டுமின்​றி வெளி​நாடு​களி​லும்​ இசைக்​ கச்​சேரி​கள்​ செய்​து வரு​கிறார்​.

சங்கராபரணத்தில் மிளிர்ந்த காயத்ரி  வெங்கடராகவன் | சென்னை இசை அரங்கம்
வராளியில் மெய்மறக்கச் செய்த வெங்கட நாகராஜன் | சென்னை இசை அரங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in