

கிளாசிக்கல் வயலின் கலைஞர் நிகேதனா
நியூயார்க் கோல்டன் கிளாசிக்கல் மியூசிக் அவார்ட்ஸ் சர்வதேச போட்டியில் முதல் பரிசை வென்று, அதன் நிறைவாக நியூயார்க் நகரிலுள்ள புகழ்பெற்ற கார்னெகி ஹாலில் இசை நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் இளம் கிளாசிக்கல் வயலின் கலைஞர் நிகேதனா சிந்தியா பாண்டியன். இந்த சாதனை, உலகளாவிய கிளாசிக்கல் இசை மேடையில் அவரின் பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் பி.ஹெச்.பாண்டியனின் பேத்தி நிகேதனா சிந்தியா பாண்டியன். இவர் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திறமையான கலைஞர் கள் பங்கேற்ற சர்வதேச இசைப் போட்டியில், தனது சிறப்பான கலை நயம், தொழில் நுட்பத்திறன் மற்றும் இசைக்கு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கடந்த 2025 டிச.17-ம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த இளம் இசைக் கலைஞர்கள் கவுரவிக்கப்பட் டதுடன், உலகின் மிகச் சிறப்பு வாய்ந்த இசை அரங்குகளில் ஒன்றான கார்னெகி ஹாலில் இசை நிகழ்த்தும் அபூர்வ வாய்ப்பையும் நிகேதனா பெற்றார். தனது 5 வயதில் வயலின் இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், பேராசிரியர் டிமிட்ரி டோர்சின்ஸ்கியிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
கோல்டன் கிளாசிக்கல் மியூசிக் அவார்ட்ஸ் அமைப் பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இளம் திறமை களை உலகுக்கு அறிமுகப் படுத்துவதோடு. அடுத்த தலை முறை கிளாசிக்கல் இசைக் கலைஞர் களை உருவாக் குவதில் முக்கியப் பங்கும் வகித்து வருகிறது. நிகேதனா வின் இந்தச் சாதனையானது கட்டுப்பாடு, ஆர்வம், கலைக்கு அர்ப்பணிப்பு மற்றும் அதன் வலிமையை வெளிப்படுத்துவ தாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.