ராஜா ரவி வர்மாவின் யசோதா, கிருஷ்ணா வண்ண ஓவியம் ஏலத்தில் ரூ.167 கோடிக்கு விற்பனை

ராஜா ரவி வர்மாவின் யசோதா, கிருஷ்ணா வண்ண ஓவியம் ஏலத்தில் ரூ.167 கோடிக்கு விற்பனை
Updated on
1 min read

புதுடெல்லி: புகழ்​பெற்ற இந்​திய ஓவியர் ராஜா ரவி வர்​மா​வின் யசோதா மற்​றும் கிருஷ்ணா வண்ண ஓவி​யம் ரூ.167 கோடிக்கு விற்​பனை​யாகி உள்​ளது.

சர்​வ​தேச முன்​னணி ஏல நிறு​வன​மான ‘சஃப்​ரான் ஆர்ட்' சார்​பில் வசந்​த​கால நேரடி ஏலம் மும்​பை​யில் நேற்று முன்​தினம் நடைபெற்றது. இதில் புகழ்​பெற்ற இந்​திய ஓவியர் ராஜா ரவி வர்மா​வின் யசோதா மற்​றும் கிருஷ்ணா வண்ண ஓவி​யம் ரூ.167.2 கோடிக்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. இதன் மூலம் ஏலத்​தில் விற்பனை செய்​யப்​பட்ட நவீன இந்​தி​யக் கலை​யின் மிக உயர்ந்த மதிப்​பு மிக்க படைப்​பாக இது உரு​வெடுத்​துள்​ளது.

கடந்த ஆண்டு நடை​பெற்ற ஏலத்​தில் சுமார் ரூ.118 கோடிக்கு விற்பனை​யான எம்​.எஃப். ஹுசைனின் 'பெயரிடப்​ப​டாத (கி​ராம் யாத்​ரா)' ஓவி​யத்​தின் சாதனையை இந்​தப் படைப்பு முறியடித்துள்ளது. ரூ.80 கோடி முதல் ரூ.120 கோடி வரை மதிப்பிடப்​பட்ட இந்த ஓவி​யத்​தை, சீரம் இன்​ஸ்​டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவன நிர்​வாக இயக்​குநர் டாக்​டர் சைரஸ் எஸ்​.பூ​னா​வாலா வாங்​கி​யுள்​ளார்.

இது குறித்து பூனா​வாலா கூறும்​போது, “ராஜா ரவிவர்​மா​வின் ஓவியத்​தைப் பாது​காக்​கும் வாய்ப்பு கிடைத்​ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். இந்த தேசி​யச் செல்​வம் அவ்வப்போது பொது​மக்​களின் பார்​வைக்கு வைக்​கப்பட வேண்டும், அதைச் செயல்​படுத்த நான் முயற்​சிப்​பேன்” என்​றார்.

1890-களில் வரைந்தது: 1890-களில், ரவிவர்மா கலைப்​ பயணத்தின் உச்​சத்​தில் இருந்​த ​போது இந்த ஓவி​யம் வரையப்பட்டது. யசோதை பசு​விடம் பால் கறப்​ப​தை​யும், குழந்தை கிருஷ்ணன் பின்​னால் இருந்து ஒரு கிண்​ணத்​தில் பாலை எடுக்க முயற்​சிப்​ப​தை​யும் இந்த ஓவி​யம் சித்​தரிக்​கிறது. இது ரவி வர்​மா​வின் மிக​வும் குறிப்​பிடத்​தக்க படைப்​பு​களில்​ ஒன்றாகக்​ கருதப்​படுகிறது.

ராஜா ரவி வர்மாவின் யசோதா, கிருஷ்ணா வண்ண ஓவியம் ஏலத்தில் ரூ.167 கோடிக்கு விற்பனை
கே.என்.நேரு ‘ஹாட்ரிக்’ சாத்தியமா? - திருச்சி மேற்கு தொகுதி ரவுண்ட்-அப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in