கர்னாடக சங்கீத உலகில் ஜொலிக்கும் இரட்டையர் | சென்னை இசை அரங்கம்

அர்ச்சனா, ஆர்த்தி சகோதரிகள்.

அர்ச்சனா, ஆர்த்தி சகோதரிகள்.

Updated on
2 min read

சென்னை: சென்னை மியூசிக் அகாடமி இசைக் கலைஞர்​களுக்கு மட்​டு மல்​லாது இசை ஆசிரியர்​களுக்​கும், இசை அறிஞர்​களுக்​கும் விருதுகள் வழங்கி கௌர​வித்து வரு​கிறது. ஒவ்​வொரு​வருக்​கும் உரிய அங்​கீ​காரம் வழங்​கு​வ​தில் மியூசிக் அகாடமி ஒரு​நாளும் தவறு​வ​தில்​லை.

சென்னை மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை​விழா​வில் அர்ச்​சனா - ஆர்த்தி இரட்​டையரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. இவர்​களுக்கு பக்​கபல​மாக நாகர்​கோ​வில் கே.ஆனந்த் (வயலின்), டி.நிக் ஷித் (மிருதங்​கம்), குறிச்​சி​தானம் அனந்​தகிருஷ்ணன் (கடம்) இருந்​தனர்.

அர்ச்​சனா - ஆர்த்தி சகோ​தரி​கள், ‘நாதசுதா ரஸம் பிலனு’ எனத் தொடங்​கும் ஆரபி ராக தியாக​ராஜ சுவாமி கீர்த்​தனை​யுடன், கச்​சேரியைத் தொடங்​கினர். அடுத்​த​தாக தன்​யாசி ராகத்​தில் சிறிய ஆலாபனை தொடர்ந்​தது. சியாமா சாஸ்​திரி​யின் மிகப் பிரபல​மான, ‘மீனலோ​சன’ சாஹித்​யத்​தை, சகோ​தரி​கள் பாடினர்.

‘காம​பாலினி பவானி சந்​திரகலாதரி நீ’ என்ற வரி​யில் நிர​வல் செய்​து, ஸ்வரக் கோர்​வை​களைப் பாடினர். இந்த சாஹித்​யத்​தில், ‘மீன் போன்ற கண்​களை உடைய​வளான பார்​வதி தேவி​யே.. இசையை விரும்​புபவளே, அனை​வரிடத்​தும் தாயைப் போன்று கருணை காட்​டு​பவளே. என்னை காப்​ப​தற்கு ஏன் தயங்​கு​கிறாய்?’ என்று சியாமா சாஸ்​திரி வேண்​டு​கிறார்.

பின்​னர் ஹமீர் கல்​யாணி ராகத்​தில் அமைந்த சுப்​ப​ராய சாஸ்​திரி​யின் ‘வேங்​கடசைல விஹார’ பாடல், மனோரஞ்​சனி ராகத்​தில் அமைந்த தியாக​ராஜ சுவாமி​யின் கீர்த்​தனை (அடு​கா​ராதனி) ஆகிய​வற்​றைப் பாடினர். பிர​தான ராக​மாக காம்​போஜி அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பின் முத்​துசு​வாமி தீட்​சிதரின் ‘ சுப்​ரமண்​யாய நமஸ்​தே’ க்ரு​தி​யைப் பாடினர்.

‘தீ​ராய நத விதாத்ரே தேவ ​ராஜ ஜாமாத்​ரே’ என்ற வரி​யில் நிர​வல் செய்து ஸ்வரக் கோர்​வை​களைப் பாடினர். இந்த க்ரு​தி​யில் முரு​கப் பெரு​மான் 3 அசுரர்​களை (தா​ர​காசுரன், சிங்​க​முகன், சூரபத்​மன்) அழிப்​பவ​ராக​வும், 3 வித துன்​பங்​களை (தா​னாக தேடிக் கொள்​வது, அடுத்​தவர் நமக்கு அளிப்​பது, இயற்கை சீற்​றம் மற்​றும் விதி​யால் ஏற்​படு​வது) அழிப்​பவ​ராக​வும் போற்​றப்​படு​கிறார். தனி ஆவர்த்​தனத்​தில் நிக் ஷித், அனந்​த கிருஷ்ணன் இரு​வரும் தங்​கள் பங்​களிப்பை திறம்பட அளித்​தனர்.

ராகம் தானம் பல்​லவிக்கு பூர்வி கல்​யாணி​யும் லலி​தா​வும் சேர்ந்த பல்​லவி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டது. கண்ட ஜாதி திரிபுட தாளத்​தில் மிஸ்ர நடை​யில் அமைந்த பல்​லவி ‘அபூர்வ பலதா​யி​காம் கல்​யாணி​காம் சதா பஜே ஆனந்​த​தா​யி​காம் லலி​தாம்​பி​காம்’ சிறந்த முறை​யில் கையாளப்​பட்​டது. ராக​மாலிகை​யாக கல்​யாணி, ஆனந்​த​பைர​வி, கேதா​ரம் ராகங்​களில் ஸ்வர மழை பொழிந்​தது.

ஹமீர் கல்​யாணி, காம்​போஜி ராகங்​களி​லும், ராகம் தானம் பல்​ல​வி​யிலும் வயலினில் ஆனந்​தின் பங்கு பாராட்​டுக்​குரியது. யமன் கல்​யாணி ராகத்​தில் அமைந்த ஆர்​.கே.​ராம்​கு​மாரின் ‘சா​ரதே சரதிந்து சமானனே’ பாடலுடன் கச்​சேரியை சகோ​தரி​கள் நிறைவு செய்​தனர்.

ஹரி​கேசநல்​லூர் முத்​தையா பாகவதரின் உறவின​ரான அர்ச்​சனா - ஆர்த்தி சகோ​தரி​கள், பொறி​யியல் படிப்பை முடித்​து​விட்டு இசைத் துறையை தேர்ந்​தெடுத்​துள்​ளனர். விதூஷி ஆர்​.வேதவல்​லி​யின் மாணவி​களான இவர்​கள், இந்​தியா மற்​றும் வெளி​நாடு​களில்​ கச்​சேரி நிகழ்த்​தி வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>அர்ச்சனா, ஆர்த்தி சகோதரிகள்.</p></div>
கல்யாணி ராக பல்லவியில் அசத்திய பரத் சுந்தர் | சென்னை இசை அரங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in