

சிவபெருமானின் பெருமை, தெய்வீக ஆற்றல் மற்றும் ஆன்மிக உணர்வுகளை உணர்த்தும் வகையில் “அகரவா மகரவா”என்ற ஆன்மிக ஆல்பம் உருவாகியுள்ளது.
யான் பவுண்டேஷன் வழங்கியுள்ள இந்தப் பாடலுக்கு கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார். சமுத்திரக்கனி, லக் ஷ்மன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சாவியோ இயக்கியுள்ளார். கோல்ட் தேவராஜ் பாடியுள்ள இப்பாடலை சாரதி எழுதியுள்ளார்.
பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தேச மங்கையர்கரசி, சிவ.சதீஷ்குமார், ரேகா மணி, திரைப்பட இயக்குநர்கள் லஷ்மன், வசந்தமணி உள்ளிட்டோர் பாடலை வெளியிட்டனர்.