அரசியல்

யார் இந்த சோனம் வாங்சுக்? - போராட்டமும் பின்னணியும் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்ற ஒற்றைக் கோரிக்கையோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக். அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இன்று 19-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை அவர் 9 கிலோ எடை இழந்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அவர் உண்ணாவிரதம் இருக்கும் மேடைக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வருகின்றனர். அங்கே மாணவர்கள் உரிமை, இளைஞர்கள் நலன் பற்றி தொடர் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைவதால் அவருக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க வலியுறுத்தி பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிரும் முக்கியமானது. சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை மத்திய அரசு அன்றாடம் கண்காணித்து, தேவைப்படும்போது மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. மத்திய அரசும் அதற்கு இசைவு தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு ஆமிர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தில் ஆமீர் கான் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சோனம் வாங்சுக். ஆனால், அது மட்டுமே அவருக்கான அடையாளமில்லை. யார் இந்த சோனம் வாங்சுக், அவரது போராட்டத்தின் பின்புலம் என்ன? - இந்தக் கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

SCROLL FOR NEXT