அரசியல்

டெல்லியில் அமித் ஷாவிடம் இபிஎஸ் பேசியது என்ன?

செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணி முழு வடிவம் பெற்றுள்ள நிலையில், இன்னும் தொகுதிப் பங்கீட்டை தொடங்கவில்லை. இதற்கிடையில், மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தின் முடிவில், கூட்டணி தலைவர்கள் கூட்டம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில், பழனிசாமி முன்னிலையில் அன்று இரவு நடைபெற்றது. அதில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தொகுதி பங்கீட்டை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கலந்தாலோசித்து இறுதி செய்வதற்காக பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார்.

பின்னர் இரவு அமித் ஷாவை சந்தித்து, எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவி, ஜி.கே.வாசனுக்கா, அன்புமணிக்கா என்பது குறித்தும் விவாதித்தனர். பின்னர், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் ஒன்றையும் அமித் ஷாவிடம் பழனிசாமி வழங்கியதாகவும், இவர்களை தேர்தல் பணியில் ஈடுபடாத துறைக்கு இடமாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

          
SCROLL FOR NEXT