அரசியல்

விஜய் காட்டும் ‘அவசரம்’... பனையூரில் நடப்பது என்ன?

செய்திப்பிரிவு

சட்​டமன்​றத் தேர்​தலில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்த நிர்​வாகி​களு​டன் விஜய் செவ்வாய்கிழமை நேரடி​யாகக் கலந்​துரை​யாடி​னார். சென்னை கிழக்கு கடற்​கரை சாலை, பனையூரில் உள்ள தமிழக வெற்​றிக் கழக அலு​வல​கத்​தில் இந்​தச் சந்​திப்பு நடை​பெற்​றது. முதற்​கட்​ட​மாக 60 நிர்​வாகி​கள் இந்​தச் சந்​திப்​பில் பங்​கேற்​ற​னர். முதலில் தி.நகர் தொகு​தி​யில் போட்​டி​யிட விருப்​பம் தெரி​வித்​திருந்த கட்​சி​யின் பொதுச் ​செய​லா​ளர் ஆனந்​திடம் விஜய் நேர்​காணல் நடத்​தி​னார். அவரைத் தொடர்ந்து மற்​றவர்​களிட​மும் வரிசை​யாகப் பேசினார்.

அப்​போது விஜய், “மக்​களுக்கு நல்​லது செய்ய வேண்​டும் என்​பது​தான் நமது நோக்​க​மாக இருக்க வேண்​டும். இந்​தப் பாதை​யில் நமக்கு நிறைய தடைகள், சவால்​கள் வரலாம். அதையெல்​லாம் முன்​கூட்​டியே தெரிந்​து​தான் நான் களத்​திற்கு வந்​திருக்​கிறேன். நிச்​ச​யம் நாம் வெற்றி பெற்​று, மக்​களுக்கு நல்​லது செய்ய வேண்​டும் என்ற நமது கொள்​கை​யில் வெல்​வோம்!” என உற்​சாகப்​படுத்​தி​ய​தாக கூறப்படுகிறது.

நேர்​காணல் முடிந்​ததும் அவர்​கள் ஒவ்​வொரு​வ​ருட​னும் கை குலுக்கி வழிய​னுப்பி வைத்​தார். வெளியே வந்​தவர்​களுக்​கு, அவர்​கள் போட்​டி​யிட விரும்​பிய தொகு​தி​யின் பெயருடன் கூடிய பிரத்​யேக ‘பை’ ஒன்று வழங்​கப்​பட்​டது. அதில் தேர்​தலில் எப்​படிப் பணி​யாற்ற வேண்​டும் என்​பது உள்​ளிட்ட முக்​கிய விவரங்​கள் அடங்​கிய கையேடு இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. அடுத்​தடுத்த நாட்​களில் மற்ற தொகு​தி​களுக்​கான வேட்​பாளர்​களை​யும் அழைத்து விஜய் பேச இருக்​கி​றார்.

          

இந்த திடீர் நேர்​காணல் குறித்து பேசுவோர், “தி​முக கூட்டணிக்கு காங்​கிரஸ் சென்ற பிறகு விஜய் வருத்​தத்​தில் இருப்​பது உண்​மை​தான். அந்​தச் சூழலைப் பயன்​படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு அழைப்​பு​கள் வருகின்றன. ஆனால் அதை ஏற்​றுக்​கொள்ள விஜய் தயாராக இல்​லை. இதற்​கிடை​யில், கரூர் விவ​காரம் தொடர்​பான சிபிஐ விசா​ரணைக்கு டெல்லி அலுவலகத்தில் ஆஜராகு​மாறு விஜய் தரப்​புக்கு சம்​மன் அளிக்​கப்​பட்​டது. அங்கு சென்​றால் தேவையற்ற அரசி​யல் விவாதங்​கள் எழும் என விஜய் தரப்பு கருதுகிறது.

எனவே​தான், இந்த வேட்​பாளர் நேர்​காணல் அவசர​மாகத் திட்​ட​மிடப்​பட்​டது. இந்த வாரம் முழு​வதும் கட்சி நிகழ்ச்சிகள் தொடரும். பின்​னர் மார்ச் 18-ம் தேதி அமாவாசை தினத்​தன்​று, 234 தொகு​தி​களுக்​கு​மான வேட்பாளர் பட்​டியலை வெளி​யிட்​டு​விட்​டு, அதன் பிறகு​தான் விஜய் டெல்லி செல்​வார்” என்​ற​னர். தவெக இணைப் பொதுச் செய​லா​ளர் நிர்​மல் குமார் கூறும்போது, “நாங்​கள் பாஜக கூட்​ட​ணி​யில் இணை​யப் போவ​தாக வெளி​யாகும் தகவல்​கள் வெறும் யூகங்​களே. அதி​காரப்​பூர்வ அறி​விப்பு ஏதே​னும் இருந்​​தால் அது தலை​மை​யால் முறைப்​படி அறிவிக்​கப்​படும்” என்​றார்.

SCROLL FOR NEXT